எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் - பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸை, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா வரவேற்றார். தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றனர்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியும், பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியவின் போராட்டத்தில் துணையாக நின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இருதரப்பு வர்த்தகம் 3 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கும் பிலிப்பைன்ஸின் முடிவை வரவேற்பதாக கூறிய பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றார். இந்தியாவும் பிலிப்பைன்ஸும் விருப்பப்படி நண்பர்களாகவும், விதிப்படி கூட்டாளிகளாகவும் உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.