நீலகிரி, கோவைக்கு இன்று ரெட் அலர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் குழுவினர் வருகை தந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிகமழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். 

உதகையில் சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.

Night
Day