பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து பெற்றார்.

நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லி புறப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை மத்திய அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற சி.பி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 21 ஆம் தேதி கடைசி தினம் என்பதால் ஓரிரு தினங்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்ப்பாக்கப்படுகிறது. என்டிஏ சார்பில் குடிரசு துணை தலைவர் தேர்தலில் தமிழர் களமிறக்கபட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியிலும் தமிழரை வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day