புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லி அம்மன் ஆலயத்தில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். புரட்சித்தாய் சின்னம்மா பூரண சுகத்துடனும், நீண்ட  ஆயுளுடனும் வாழ வேண்டியும், சின்னம்மா தலைமையில் கழகம் ஒன்றிணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டியும் செல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வேண்டுதல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் G. சண்முகநாதன்,  முன்னாள் கவுன்சிலர் உ. ரங்கநாதன், ர. செந்தில் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Night
Day