புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட கழக நிர்வாகிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கி புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றிய கழகம் சார்பில் கழக நிர்வாகி வள்ளிநாயகம் தலைமையில் பட்டாசு வெடித்து புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து களப்பாகுளம் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புரட்சித்தாய் சின்னம்மா நலமுடன் வாழ வேண்டி கழக நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து கழக நிர்வாகிகள் பொங்கல் வழங்கி புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நாளை கொண்டாடினர். 

இந்நிகழ்ச்சிகளில் கழக நிர்வாகிகள் வள்ளிநாயகம், பூசைத்துரை, திருப்பதி, மீன்துள்ளி செல்லத்துரை, அழகு தமிழ்ச்செல்வி, மகாலட்சுமி, சுப்புலட்சுமி செல்வராணி, பாரதி தேவி S.முத்துலட்சுமி, வேல்மையில் நாச்சியார், P முத்துலட்சுமி, வேல்மையில், கோட்டை களஞ்சியம், சண்முக ஜெயா, சண்முகப்பிரியா, குணசுந்தரி, கோகிலா, ஜெயஜோதி, சீதாலட்சுமி, ராஜலட்சுமி, அபிநயா, பூவிதா, கோபிகா, கோகிலா, மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Night
Day