விளக்கம் கேட்டு அன்புமணிக்கு, ராமதாஸ் நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில் கட்சிக்கும், நிறுவனர் ராமதாசிற்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு கலங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் அன்புமணி ஏற்படுத்தியுள்ளதாகவும் ராமதாஸ் வீட்டில் அவர் அமரும் இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்பு கருவி வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ராமதாசின் உரிய அனுமதியின்றி நடைப் பயணம் மேற்கொண்டு வருவது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் அன்புமணிக்கு எதிராக முன் வைக்கப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கும் ஏழு நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அன்புமணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.   

varient
Night
Day