சென்னை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிபன்ஸ் காலனியில் உள்ள இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன் அலுவலகத்தில் வருமானத்தை மறைத்து தவறான கணக்குகளை காண்பித்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன் அலுவலகத்தில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.

Night
Day