பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம்- பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காமில் 26 பேரைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அங்கோலா அதிபர் ஜோவோ லூரென்சோ, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் அங்கோலாவும் தங்கள் இராஜதந்திர கூட்டாண்மையின் 40 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன என்றார். அங்கோலா தனது சுதந்திரத்திற்காகப் போராடியபோது, இந்தியா நம்பிக்கை மற்றும் நட்புறவுடன் அதன் பக்கத்தில் நின்றதாக குறிப்பிட்டார். 

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்று இரு நாடுகளும் நம்புவதாகவும், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க  உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அங்கோலா அளித்த ஆதரவிற்கு  நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், ஆப்பிரிக்க நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் கடல்சார் பாதுகாப்பையும் மேம்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

Night
Day