ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ வைரல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், உள்ளூர் மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை  2 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைக்குமாறு நேற்று அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், உணவு, மருந்துகள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு ஒரு பில்லியன் டாலர் அவசர நிதியையும் ஒதுக்கியது. இந்தநிலையில் மக்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தலாம் என அமைச்சர்கள் சிலர் கூறியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தனது வளங்களை வீணடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Night
Day