எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா வந்துள்ள அங்கோலா அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரென்கோவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பின் பேரில் அங்கோலா அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரென்கோ இந்தியா வந்துள்ளார். 38 ஆண்டுகளுக்கு பிறகு அங்கோலா அதிபர் ஒருவர் இந்தியா வந்துள்ளது இதுவே முதல் முறை. அங்கோலா அதிபர் லாரென்கோவை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கோலா அதிபருக்கு அளிக்கப்பட்ட ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அங்கோலா அதிபர், இரு நாடுகளிடையிலான நட்புறவு, ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும், இந்திய மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்காட் சென்ற அங்கோலா அதிபர் ஜான் மானுவல்
கோன்கால்வ்ஸ் லாரென்கோ அங்குள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கோலா அதிபருடன் அவரது மனைவி மற்றும் அமைச்சர்கள், உயர்நிலை அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட உயர் மட்டக்குழுவும் இந்தியா வந்துள்ளது.