எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. சுமார் 23 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் தேர்வு எழுத உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 இருபது மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது, ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான ஆடைகளை அணிவது, ஆபரணங்கள், அலங்காரங்கள் இல்லாமல் எளிய ஆடைகளை பெண் தேர்வர்கள் அணிந்து வருவது போன்ற வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை சரிபார்க்க வசதியாக காலை 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.