12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

எழுத்தின் அளவு: அ+ அ-

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

வரும் 9ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தநிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக வரும் 8ம் தேதியான நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை அறியலாம்.

Night
Day