சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை தீர்வுகள் மற்றும் தொழில்துறை மேம்பாடுகள் சார்ந்த தொழில் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையை தலைமையிடமாக கொண்டு சுற்றுச்சூழல், வனம், சுகாதாரம், மற்றும் பாதுகாப்பு மேலாண்மைகள் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் சுகாதாரம் சார்ந்த நிறுவனம் மற்றும் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் செயல்படும் நிறுவனம் மற்றும் கோயம்பேட்டில் இயங்கி வரும் சுற்றுச்சூழல் சார்ந்த நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை கேகே நகர் ராமசாமி சாலையில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கியது, தமிழக சுற்றுச்சூழல் துறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை கையாள்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும், தொழில்நுட்பங்களையும் வழங்கியதில் நடைபெற்ற பணிகளில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அமலாக்க துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

Night
Day