இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள் வழங்கியது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை 14 பேரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4பேர் பல மணி நேர விசாரணை பின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...