எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிறு வணிகங்கள் எளிதாக்குவதை ஜி.எஸ்.டி உறுதி செய்வதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி.எ.ஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்தும், 2 அடுக்குகளை குறைப்பது குறித்தும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான ஜி.எஸ்.டி விகித பகுத்தறிவு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.