தவறான வழியில் இந்தியா கூட்டணி செல்லாது - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்கள் பலன் தராததால், அச்சத்தின் காரணமாக, இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் விரும்புவதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது என்றும் வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா தவறான பாதையில் செல்லாது எனப் பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day