இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மேயர் இல்லத்தை முற்றுகையிட்ட ஏபிவிபி அமைப்பினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். டெல்லியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, ராஜிந்தர் நகரிலுள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைத்தளத்துக்கு கீழ் உள்ள அறைகளில் வெள்ளம் சூழ்ந்ததில் நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி ஏராளமான மாணவர் அமைப்புகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஏபிவிபி அமைப்பினர், டெல்லி மேயர் இல்லத்தை முற்றுகையிட்டதுடன் அமைச்சர் அதிஷி பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...