இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
மத்திய அரசு திட்டங்களின் கட்டமைப்பை சீர்குலைக்காமல், முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வந்த இரண்டு நாள் பாஜக முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஏழைகளுக்கான மத்திய அரசின் நலத் திட்டங்களில் மாநிலங்கள் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என முதலமைச்சர்களிடம் பிரதமர் கூறியதாகத் தெரிகிறது. உதாரணமாக, பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு வழங்குகிறது என்றால், மாநில அரசு அதன் அளவை அதிகரிக்கவோ குறைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...