ராகுல் தனது தோல்வியை மறைக்க அவதூறு பரப்புகிறார் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது தோல்விகளை மறைக்க ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். 

டெல்லியில் பேட்டியளித்த அவர், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் முகவர்களே எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும், முறைகேடு புகார்களைத் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் பலமுறை சரிபார்க்கப்பட்டது என்றும் கூறினார். தனது தோல்வி மற்றும் பலவீனங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பபுவதற்காக ராகுல்காந்தி முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய கிரண் ரிஜிஜு, வாக்கு திருட்டு எனக் கூறி இளம் வாக்காளர்களை தூண்டி விடுவதாக சாடினார். உண்மையான பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பதிலாக கவனத்தைத் திசைதிருப்பும் உத்தியை ராகுல் காந்தி கையாள்வதாகவும் அவர் கூறினார்.

Night
Day