ஜார்க்கண்ட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.


ஜாம்ஷெட்பூர் அருகே செராய்கேலா கர்ஸ்வான் மாவட்டம் சண்டில் என்ற இடத்திற்கு அருகில் சரக்கு ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் சண்டில்- டாடாநகர் இடையிலான ரயில் சேவை இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Night
Day