எழுத்தின் அளவு: அ+ அ- அ
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங், பாகிஸ்தானின் பாவல்பூரில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை சேதப்படுத்திய வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்தார்.
நமது வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 அமைப்பு சிறப்பான பணியை செய்ததாகக் கூறிய ஏபி சிங், இந்த அமைப்பு பாகிஸ்தானின் நீண்ட தூர இலக்கைத் தாக்கும் கிளைடர் குண்டுகளை பயன்படுத்த முடியாமல் தடுத்ததாகவும் அவற்றில் ஒன்று கூட இந்தியாவை ஊடுறுவ விடவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானின் ஐந்து போர் விமானங்களையும் ஒரு பெரிய விமானத்தையும் 300 கிலோ மீட்டர் தூரத்திலேயே வீழ்த்தியதாக கூறி விமானப்படை தளபதி ஏ.பி.சிங், இது நமது தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் திறனில் மிகப் பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.