சத்தீஸ்கர் முதலமைச்சர் இல்லத்திற்குள் துப்பாக்‍கியுடன் நுழைந்த நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரின் இல்லத்துக்‍குள் துப்பாக்‍கியுடள் ஒரு நபர் நுழைந்த நிலையில், பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக காவல்துறையினர் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரான விஷ்ணு தியோ சாயின் தற்காலிக இல்லம் ராய்ப்பூரில் உள்ள பகுனா பகுதியில் உள்ளது. முதலமைச்சர் கடந்த 25 ஆம் தேதி தெலங்கானாவுக்‍கு சென்ற நிலையில், அவரது இல்லத்துக்‍குள் விஐபி என்ற பிளேட்டுடன் கூடிய காரில் உரிமம் பெற்ற துப்பாக்‍கியுடன் ஒருவர் நுழைந்துள்ளார். அவரிடம் பணியில் இருந்த காவலர்கள் யாரும் பாதுகாப்பு சோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. முதல்வரின் அறைக்‍கு முன் உள்ள பாதுகாப்பு அலாரம் ஒலி எழுப்பியதால் அங்கிருந்த போலீசார் நடத்திய சோதனையில் துப்பாக்‍கி கண்டறியப்பட்டது. 

Night
Day