அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கீழடி அகழாய்வில் கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரிய வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா - தனபால் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், மத்திய அரசு ஒப்படைக்கும் அகழாய்வு பொருட்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

varient
Night
Day