குஜராத் சட்ட பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களுக்கு பாலியல் சித்ரவதைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடந்த ஆண்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள், ஓரினச்சேர்க்கை சித்ரவதைகள் ஆகியவை அதிர்ச்சி அளிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை படிக்கவே அச்சமாக இருப்பதாக கூறிய நீதிபதி, பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்க உயர்நிலை குழு அமைத்து உத்தரவிட்டார்.

varient
Night
Day