ஞானவாபி மசூதி விவகாரம் : புதிய சர்ச்சையில் 'வியாஸ்' மண்டபம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரத்தில், வியாஸ் மண்டபம் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே கோயிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி கட்டியதாக ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், ஞானவாபி மசூதியின் வியாஸ் மண்டபத்தின் மேல்கூரை அமைந்த பகுதியில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என டாக்டர்.ராம் பிரசாத்சிங் என்பவர், வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மார்ச் 19-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. இதேபோல, ஞானவாபி மசூதி வளாகத்தில் மீதம் உள்ள 8 அடித்தளப் பகுதிகளிலும் களஆய்வு நடத்தக் கோரியும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

varient
Night
Day