பாமகவிலிருந்து ஜி.கே மணி நீக்கம் - அன்புமணி அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.மணி, பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து அன்புமணியை விமர்சித்தார். இதனையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அது குறித்து  விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு ஜி.கே.மணி எந்தவித பதிலும் அளிக்காததால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கட்சியில் இருந்து ஜி.கே.மணியை அன்புமணி நீக்கி உள்ளார்.

Night
Day