கல்வி அமைச்சர் தொகுதியில் தடையை மீறி சிறப்பு வகுப்புகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தொகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் அரசு விதிகளை மீறி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் விடுமுறை நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அதனையும் மீறி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியான திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்கழி மாதம் கடும் பனிமூட்டம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் அரசு விதிகளை மதிக்காமல் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதை விளம்பர அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிப்பதாக துமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Night
Day