தட்கல் டிக்கெட்டுக்கு விரைவில் OTP கட்டாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் ரயில்வேத் துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. முதல்கட்டமாக ஐந்து ரயில்களில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தட்கல் டிக்கெட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, தற்போது பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படும் ஒருமுறை ஓடிபி சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் சரிபார்க்கப்பட்ட பிறகு மட்டுமே பயணிகள் டிக்கெட் புக் செய்ய முடியும் என்றும் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.. இந்த புதிய நடைமுறை இணையதளம், மொபைல் செயலி மற்றும் ரெயில்வே கவுண்டர் ஆகிய அனைத்து வழிகளிலும் பொருந்தும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை தற்போது சென்னை செண்ட்ரல்  -அகமதாபாத் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ், சென்னை செண்டரல் ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்- மும்பை எக்ஸ்பிரஸ், ஆலப்புழா -தன்பாத்  எக்ஸ்பிரஸ்  உள்ளிட்ட  ஐந்து ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Night
Day