ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விரைவு ரயில்களில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  அதன்படி 751 கிலோ மீட்டர் முதல் ஆயிரத்து 250 கிலோமீட்டர் வரையிலான ரயில் பயணத்திற்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், சிறிய அளவில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலாகியுள்ளது.  கட்டண உயர்வின்படி, 'விரைவு ரயில்களில், 215 கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் ஸ்லீப்பர் வகுப்புகளில் கிலோமீட்டருக்கு 2 பைசா என்ற அளவில் உயர்கிறது. இதனால் சாதாரண நீண்ட தூரப் பயணங்களுக்கு   20 ரூபாய் முதல்   50  ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் ஏதுமில்லை. 

Night
Day