கர்நாடக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் சித்தராமையா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறையை வைத்துள்ள முதலமைச்சர் சித்தராமையா இன்று தாக்கல் செய்கிறார். 5 இலவச திட்டங்களை கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் நிலையில் நிதிச்சுமை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் பட்ஜெட்டில் பெரிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீர்மாணித்துள்ளன. வறட்சி நிவாரண பணிகளில் தாமதம், மின் தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சனை, 40 சதவீதம் கமிஷன் உள்ளிட்ட பிரச்சனை எழுப்பி அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day