டெல்லி: வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி பஜன்புராவில் வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். யமுனா விஹார் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவலறிந்த்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசார் வீட்டின் சுவற்றில் பாய்ந்த தெறித்த தோட்டாக்களை கைப்பற்றி குற்ற செயலில் ஈடுபட்ட சிறுவர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day