கர்நாடகாவின் முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக முதலமைச்சர், உள்துறை அமைச்சர், டிஜிபி ஆகியோருக்கு வந்த மின்னஞ்சலில், பேருந்துகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடிப்பை தவிர்க்க வேண்டும் என்றால் ஏறத்தாழ 20 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம், வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலின் உண்மைத் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். 

varient
Night
Day