என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி - உயிரிழந்தவரின் மனைவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ராணுவத்தின் நடவடிக்கைக்கு பகல்ஹாம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். 

பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த இளம் பெண் அசாவரி ஜக்தேல் என்ற இளம்பெண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், இந்த நடவடிக்கையின் பெயரைக் கேட்டதும் கதறி அழுததாகவும், தாக்குதலில் கணவர்கள், தந்தையர்களை இழந்தவர்களின் கண்ணீர் வீணாகவில்லை என தெவித்தார். மேலும், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார்.

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நார்வல் தாயார் இந்தியா ராணுவத்தின் தாக்குதல் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமணமான சில நாட்களிலேயே தனது மகனின் வாழ்க்கையை பயங்கரவாதிகள் சிதைத்து விட்டதாக வேதனை தெரிவித்தவர். பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் வியாபாரி மஞ்சுநாத் ராவின் தாயார் கர்நாடகா மாநிலம், சிவமோகாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் மூலம் தனது மகன் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களது குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதாக கூறிய மஞ்சுநாத் ராவின் தாயார், பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கையால் தங்களது குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதாக பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி ஐஷான்யா திவேதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். மேலும், "என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.

பஹல்காம் தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த தந்தை யதிஷ் பர்மர் மற்றும் மகன் சுமித் பர்மர் ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த யதிஷ் பர்மரின் மருமகன், சம்பவம் நடந்து 15நாட்களுக்குள் ராணுவம் எடுத்த நடவடிக்கை பெருமையாக உள்ளதாகவும், பிரதமர் மோடிக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத அமைப்புகளை தாக்கி அழித்துள்ளது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை திறமையாக கையாண்ட இந்திய ராணுவத்தை நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து பகல்ஹாமில் சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில்,  இந்திய ராணுவம் எங்களுடன் இருப்பதால் நாங்கள் பயமின்றி பகல்ஹாமிற்கு வந்துள்ளதாக கூறினார். 

 

Night
Day