இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு 180 பயணிகளுடன் இண்டிகோவின் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும் டெல்லிக்கே திருப்பிவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day