ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் - எம்.எல்.ஏ. ராக்கி பிர்லா கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ ராக்கி பிர்லாவை போலீசார் கைது செய்தனர். 

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து ஏராளமான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் டெல்லி முதல்வர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராக்கி பிர்லா மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து ராக்கி பிர்லாவை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Night
Day