எழுத்தின் அளவு: அ+ அ- அ
அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்து அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 1975 ஜுன் 25 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடு தழுவிய அவசரநிலையை அமல்படுத்தினார். அதன் 50-ம் ஆண்டு நினைவுநாளான இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்த நாளில், இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள மதிப்புகள் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும், அடிப்படை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் எனக் கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரம் அழிக்கப்பட்டதுடன் பல அரசியல் தலைவர்கள், சமூக சேவையாளர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, ஜனநாயகத்தையே கைது செய்தது போல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
நமது அரசியலமைப்பின் உணர்வு மீறப்பட்ட விதத்தையும், நாடாளுமன்றத்தின் குரல் ஒடுக்கப்பட்ட விதத்தையும், நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த விதத்தையும் எந்த இந்தியனும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏழைகள், மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் குறி வைக்கப்பட்டதாகவும் அவர்களின் கண்ணியம் அவமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவசரகாலத்தின் இருண்ட நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்து அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுiகோள் விடுத்துள்ளார். கடந்த 1975ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையிலான காலத்தில் நிலவிய இருண்ட சம்பவம் குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற ஒவ்வொரு நபருக்கும் நாடு வணக்கம் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.