எழுத்தின் அளவு: அ+ அ- அ
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை சோனியா காந்திக்கு அனுப்பும் போராட்டத்தை பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்சியும் தெலங்கானா விழிப்புணர்வு அமைப்பு நிறுவனருமான கவிதா தொடங்கி வைத்துள்ளார்.
ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலங்கானாவில் ஆட்சிக்கு வரும் முன் 6 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்ததாகக் குறிப்பிட்டார். அதில் சோனியாகாந்தி கையெழுத்திட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 4 ஆயிரம் ரூபாயாகவும், பின்னர் 6 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று கூறி இருந்ததாக தெரிவித்தார். ஆனால், 18 மாதங்களாக பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.