தேசிய நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட்ரமணா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு சார்பில் மாநிலங்களில் அமைக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதம் என்றும், அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் சுங்க கட்டணம் வசூலிக்‍க தடை விதிக்குமாறும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் கொண்ட அமர்வு, சுங்கக்‍கட்டண வசூல் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Night
Day