எழுத்தின் அளவு: அ+ அ- அ
விண்வெளியை நோக்கி சாதனை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபரி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்காக விண்வெளியில் புதிய மைல்கல்லை படைக்கும் சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், நட்சத்திரங்களை நோக்கிய இந்தியரின் பயணத்தில் தேசம் உற்சாகமும், பெருமையும் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நாசா- இஸ்ரோ இடையேயான நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கும் இந்த விண்வெளி பயணம் வெற்றியடைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் வாழ்த்துக்களை சுமந்து சென்றுள்ள சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்தியர் என்ற பெருமையை சுக்லா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், சுக்லா மற்றும் அவரது குழுவினரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.