அரியானா முதலமைச்சராக நயாப் சிங் பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வராக பா.ஜ.க. மாநில தலைவர் நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க., 10 தொகுதிகளை வென்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது...

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி ஆட்சி நீடித்த நிலையில், மக்களவை தேர்தல் பேச்சுவார்த்தையின் போது இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது...

ஜனநாயக ஜனதா கட்சியுடன், பா.ஜ.க. கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.யான பிரிஜேந்திர சிங், பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்....

இந்நிலையில் மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளிலும் களமிறங்க திட்டமிட்டுள்ள பா.ஜ.க., ஜனநாயக ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது....

இதையடுத்து முதல்வர் பதவியில் இருந்து மனோகர் லால் கத்தார் ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வராக மாநில பா.ஜ.க. தலைவரும் மனோகர் லால் கத்தாருக்கு நெருக்கமானவருமான நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார்.

ஹரியானா லோகித் கட்சியின் கோபால் கண்டா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து, நயாப் சிங் சைனி ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நயாப் சிங் சைனிக்கு ஆளுநர் பண்டாரு தாத்தத்ரேயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

Night
Day