இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால அமர்வு நீதிபதி முகேஷ் குமார் அமர்வில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவ காரணங்களை கூறியுள்ள விவகாரத்தில் பதிலளிக்க வேண்டி இருப்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, மனு மீதான விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...