எழுத்தின் அளவு: அ+ அ- அ
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் காக்பிட் குரல் பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தால் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி அதிக அளவில் சேதமடைந்திருப்பதால், அதில் உள்ள தரவுகளை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கருப்பு பெட்டி அமெரிக்கா கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், எனினும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.