எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பா.ஜ.க, ஆட்சியில் 44 ஆயிரம் கிலோமீட்டர் தூரப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும் என்றும், அந்தளவுக்கு ரயில்வே தரம் உயர்த்தப்படும். இது மோடியின் கியாரண்டி என அவர் தெரிவித்தார். 2014 முதல் 2024 வரை, 31 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், 2004 முதல் 2014 வரை 5 ஆயிரம் கி.மீ., தூரம் வரை மட்டுமே ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.