சித்ரா பவுர்ணமியையொட்டி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டிற்கான சித்ரா பௌர்ணமியையொட்டி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து லட்ச கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

varient
Night
Day