'குடும்ப அரசியல், ஊழல் சொத்துக்களை பாதுகாக்கவே இந்தியா கூட்டணி' - பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடும்ப அரசியல் மற்றும் ஊழல் சொத்துகளை காப்பாற்றவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியது பாஜகவிற்கு மகிழ்ச்சியான விஷயம் என்றார். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நிதிஷ்குமாரின் உண்மையான கூட்டணி NDA மட்டுமே எனக் குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி என்றும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது எனக் கூறினார். பீகாரில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

Night
Day