குடியிருப்பு பகுதியில் வடியாத மழை நீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. 

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மழை நின்று 3 நாட்களாகியும் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் சிரம்மடைந்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கும்பகோணம் பகுதியில் கனமழை பெய்தது. இதில், வலையப்பேட்டை ஊராட்சி வி.கே.எஸ் நகர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மழை தேங்கி 3 நாட்களாகியும் மழை நீர் வடியாததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே, தேங்கிய மழைநீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day