"ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகள் எழுப்பும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

நாளை துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், போர் நிறுத்தம் தொடர்பான அதிபர் டிரம்ப் உரிமை கோரியது உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க் கட்சிகள் எழுப்ப உள்ளன. கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார். எதிர் கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும் என்றும், விவாதம் நடத்துவதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Night
Day