நாகை வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவ விழா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் மாசி மக திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த  மலைக் கோவிலான சன்னாசிராயன் முனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து   பாரம்பரிய முறைப்படி உறுமி மேளம் மற்றும் மேல தாளங்கள் முழங்க  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டனர். திருவிழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம்  வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர்  திருக்கோவிலில்  மாசிமக உற்சவத்தையொட்டி நடைபெற்ற திருத் தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து  சாமி தரிசனம்செய்தனர். கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமக விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் தியாகராஜசுவாமி அம்பாள் வினாயகர் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சகிதமாக திருத்தேருக்கு எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமகம் திருவிழா விபசித்து முனிவருக்கு விருத்தகிரிஸ்வரர்  காட்சியளிக்கும் ஐதீக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருகோயில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாஸ் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு புஷ்பாஞ்சலி நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி காரைக்காலில் உள்ள மஸ்தான் சாகிப் தர்காவின் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கொடிகளை சுமந்தபடி கண்ணாடிகளாலான ரதங்கள் மற்றும் பல்லாக்கு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கொடியேற்று விழா நடைபெற்றது. கந்தூரி விழாவில் காரைக்கால், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். Night
Day