தஞ்சாவூர்: அருள்மிகு வீரனார் கோயிலில் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, குலதெய்வம் கோயிலான அருள்மிகு வீரனார் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

 கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின்  குலதெய்வமான அருள்மிகு வீரனார் கோயில், தஞ்சை அருகே விளார் கிராமத்தில் அமைந்துள்ளது. புரட்சித்தாய் சின்னம்மா இந்தக் கோயிலுக்குச் சென்று  அருள்மிகு வீரனார், மதுரை வீரன் மற்றும் வனதுர்க்கை அம்மன் தெய்வங்களுக்கு மாலைகளை அணிவித்து சிறப்பு  வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, கோயிலில் அமர்ந்து,  தியானம் மேற்கொண்டார்.  

தஞ்சை அருகே உள்ள காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி  உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷகம் கடந்த 7ந்தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவுக்கு, கோயில் மற்றும் 18 கிராமங்கள் சார்பாக,  புரட்சி தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிராம மக்களின் அழைப்பை ஏற்று, புரட்சித்தாய் சின்னம்மா, அருள்மிகு அகிலாண்டேஸ்வரி  உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இவ்வழிபாட்டில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். புரட்சித் தாய் சின்னம்மாவுக்கு  அவர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். 

வழிபாட்டுக்குப் பின்னர், புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்களிடையே சிறிது நேரம் அமர்ந்து அவர்களுடன் உரையாடினார். இதனைத் தொடர்ந்து  புரட்சித் தாய் சின்னம்மாவுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Night
Day