சென்னை மணலியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 7,500 புத்தகங்களிலான விநாயகர் சிலை பிரதிஷ்டை

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள கண்கவர் விநாயகர் சிலைகள் காண்போரை பரவசமடைய செய்துள்ளன.

சென்னை மணலியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 7 ஆயிரத்து 500 புத்தகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பகவத் கீரை புத்தகங்கள், ஆயிரத்து 8 முருகன் கவசம் புத்தகங்கள் உள்பட 7 ஆயிரத்து 500 ஆன்மீக புத்தகங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Night
Day